×

கீழடியில் வேலைப்பாடுகளுடன் கூடிய 2 கார்னிலியன் சூதுபவளங்கள் கண்டுபிடிப்பு..2500 ஆண்டுகள் பழமையானது!!

கீழடி : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூதுபவளம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 9ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை ஆகிய இரு இடங்களில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொந்தகை தளத்தில் இதுவரை 158 முதுமக்கள் தாழிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 145வது தாழியினுள் 1.4 செமீ நீளமும் 2 செமீ விட்டமும் கொண்ட 2 சூதுபவளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு சூதுபவளத்தில் மேலும் கீழும் தலா 2 கோடுகளும் நடுவில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு சூதுபவளங்களின் நடுவிலும் நுண் துளைகள் உள்ளன. எனவே இவற்றை நூலில் கோர்த்து கழுத்தில் மாலையாக அணிந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது.அவற்றின் புகைப்படங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கீழடியில் வேலைப்பாடுகளுடன் கூடிய 2 கார்னிலியன் சூதுபவளங்கள் கண்டுபிடிப்பு..2500 ஆண்டுகள் பழமையானது!! appeared first on Dinakaran.

Tags : carnelian hurricanes ,Sivagangai ,2 Carnelian Hurricanes ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்